உள்ளடக்கத்துக்குச் செல்

ஃபய்ச ஜலாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபயச ஜலாலி
பிறப்பு1980[1]
இந்தியா
தேசியம்இரானியர்
பணி
  • நடிகர்
  • இயக்குநர்
  • எழுத்தாளர்
  • தயாரிப்பாளர்
  • ஆர்வலர்
  • கட்டுடற்பயிற்சியாளர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்போது

ஃபய்ச ஜலாலி (பிறப்பு 1980) ஓர் இந்திய-ஈரானிய நடிகை, இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலராவார்.[2][3][4] அவர் ஸ்லம்டாக் மில்லியனர் (2008), ஷைத்தான் (2011) ஆகிய படங்களுகாகவும் ஜால் (2012) நாடகத்திற்காகவும் பிரபலமாக அறியப்பட்டவர்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

நான்காவது தலைமுறை ஈரானியரான இவர், இந்தியாவில் வசிக்கும் ஈரானிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து மும்பையில் வளர்ந்தவர்.[6][7][8] ஜே பி பெட்டிட் உயர்நிலைப் பள்ளியில் ப்ள்ளிக்கல்வி முடித்த பிறகு, அவர் அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள பெலாய்ட் கல்லூரியில் [9] நாடகக் கலைகளைப் பயின்றார். பல் மருத்துவப் பள்ளிக்கு முன் மருத்துவப் பின்னணி வகுப்புகளையும் எடுத்துக் கொண்ன்டார். ஜலாலி, நாடகத்தில் சேர்ந்து டென்னசி பல்கலைக்கழகத்திலும், நாக்ஸ்வில்லில் உள்ள கிளாரன்ஸ் பிரவுன் தியேட்டரிலும் நுண்கலைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[10][11]

தொழில்

[தொகு]

ஜலாலியின் நாடக நடிப்பு நிகழ்ச்சிகள், மீரா நாயரின் மேடை இசைநாடகமான மான்சூன் திருமணம், ஐ டோன்ட் லைக் இட், ஆஸ் யூ லைக் இட் மற்றும் பிற தயாரிப்புகளான ஜதிங்கா, தி ஜின்ஸ் ஆஃப் ஈத்கா, தூக், எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம், ஆர்ம்ஸ் அண்ட் தி மேன், தி ட்ரெஸ்டில் போபெலிக் க்ரீக் ஆகியவை அடங்கும். அவர் தனது சொந்த நாடகங்களான 07/07/07 மற்றும் ஷிகண்டி- தி ஸ்டோரி ஆஃப் தி இன்-பிட்வீன்ஸ் போன்றவற்றையும் இயக்கி, நடித்தார். இது 2016ல் மஹிந்திரா எக்ஸலன்ஸ் இன் தியேட்டர் விருதுகளில் (META) சிறந்த குழும நடிகர்களுக்கான விருதை வென்றது. 2018 இல் , சிறந்த இயக்குநர் விருதிற்காக ஜலாலியும் பரிந்துரைக்கப்பட்டார்.[12]

அவர் ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் குர்பான் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்திய அதிரடியான விறுவிறுப்புத் தொலைக்காட்சித் தொடரான 24இலும் நடித்திருக்கிறார்.[13]

விளையாட்டு

[தொகு]

ஜலாலி ஒரு பயிற்சி பெற்ற அக்ரோபாட்டிக் ஏரியலிஸ்ட்.[14] 2019 இல் மும்பையில் நடைபெற்ற முதலாவது மல்லகாம்ப் உலகப் போட்டியில் ஈரானைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[15] கயிறு பிரிவில் இவர் பங்கேற்றார்.[16]

திரைப்படவியல்

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]

ஒரு நடிகையாக அவரது பணிகள் கீழுள்ளவாறு:

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி
2005 மிஸ்டர் யா மிஸ் சுசி ஹிந்தி
2008 ஸ்லம்டாக் மில்லியனர் செய்தி வாசிப்பாளர் ஆங்கிலம்
2009 குர்பான் அஞ்சும் ஹிந்தி
2009 தி ப்ரெசிடன்ட் இஸ் கம்மிங் கன்னியாஸ்திரி ஆங்கிலம்
2013 கிஸ்ஸா பாலி பஞ்சாபி
2016 ஃபோபியா மனநல மருத்துவர் ஹிந்தி

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு வலைத் தொடர் பங்கு மொழி
2010 மாஹி வே சோனா ஹிந்தி
2011 பெஸ்ட் ஆஃப் லக் நிக்கி டினா ஹிந்தி
2013 24 ஜியா ஹிந்தி
2017 கர்ர்லே து பீ மொஹபத் ரொமிலா சேத்ரி ஹிந்தி
2019 காஃபிர் மஸ்தானி ஹிந்தி
2019–20 ஹாஸ்டேஜஸ் சாரா ஜார்ஜ் ஹிந்தி
2020 எ சியூட்டபிள் பாய் திருமதி. சாகல் ஆங்கிலம்
2022 எடர்னலி கன்ஃப்யூஸ்ட் அப்ட் ஈகர் ஃபார் லவ் புஷ்பா ஆங்கிலம்

அரங்க நாடகம்

[தொகு]

இயக்குநர்:

  • ஜால் (2012)
  • ஷிகண்டி [17] (2016)
  • '07/07/07 [18] (2016)

மேற்கோள்கள்

[தொகு]
  1. name="indiatoday"
  2. Ravi, S (28 February 2018). "Faezeh Jalali: Stuffed with metaphors". The Hindu.
  3. name="firstpost">"Faezeh Jalali on creative freedom: 'I strongly believe that artists create to express and not to offend". Firstpost. 10 August 2022.
  4. "Faezeh Jalali". climatechangetheatreaction.com. பார்க்கப்பட்ட நாள் 5 June 2022.
  5. Jaal, TimeOut (March 2012) பரணிடப்பட்டது 12 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
  6. Bhadani, Priyanka (29 July 2018). "Humour in disguise". The Week. Archived from the original on 15 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 27 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. D'Mello, Yolande (1 December 2013). "Imagination 101". Mumbai Mirror.
  8. name="fj">"Faezeh Jalali". climatechangetheatreaction.com. பார்க்கப்பட்ட நாள் 5 June 2022."Faezeh Jalali". climatechangetheatreaction.com. Retrieved 5 June 2022.
  9. "Faezeh Jalali". Beloit College. பார்க்கப்பட்ட நாள் 22 October 2022.
  10. "FAT Productions - About Us". Archived from the original on 2014-09-03. பார்க்கப்பட்ட நாள் 2023-02-27.
  11. name="firstpost">"Faezeh Jalali on creative freedom: 'I strongly believe that artists create to express and not to offend". Firstpost. 10 August 2022."Faezeh Jalali on creative freedom: 'I strongly believe that artists create to express and not to offend". Firstpost. 10 August 2022.
  12. name="beloit">"Faezeh Jalali". Beloit College. பார்க்கப்பட்ட நாள் 22 October 2022."Faezeh Jalali". Beloit College. Retrieved 22 October 2022.
  13. "'Slumdog Millionaire' actress Faezeh Jalali bags a role in '24'". Midday. 28 March 2013.
  14. "Faezeh Jalali on creative freedom: 'I strongly believe that artists create to express and not to offend". Firstpost. 10 August 2022."Faezeh Jalali on creative freedom: 'I strongly believe that artists create to express and not to offend". Firstpost. 10 August 2022.
  15. D'Cunha, Zenia (18 February 2019). "Mallakhamb: Diversity, passion and recognition as a sport at inaugural World Championship in Mumbai". Scroll.in.
  16. "India hosts first 'yoga on a pole' world championships". France24. 17 February 2019.
  17. "Rhythmic fusion of Yakshagana and Western art". Deccan Herald. 1 October 2016.
  18. Gahlot, Deepa (31 May 2018). "Faezeh Jalali's socially relevant plays". The Hindu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபய்ச_ஜலாலி&oldid=4160878" இலிருந்து மீள்விக்கப்பட்டது